/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சபரிமலையில் கூட்ட நெரிசல்; சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
/
சபரிமலையில் கூட்ட நெரிசல்; சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
சபரிமலையில் கூட்ட நெரிசல்; சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
சபரிமலையில் கூட்ட நெரிசல்; சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
ADDED : டிச 18, 2024 11:01 PM

திருப்பூர்; சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரிப்பதால், மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கம், 2025 ஜன., கடைசி வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு ரயில் மூலம் தினமும், 50 ஆயிரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் நாடு முழுதும் இருந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம் ஜன., கடைசி வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கச்சிக்குடா - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்:07151) ஜன., 2, 9, 16 மற்றும், 23 ஆகிய தேதிகளில், வியாழன் தோறும் இயங்கும். மாலை 3:40க்கு புறப்படும் ரயில், மறுநாள் மாலை 6:50க்கு கோட்டயம் சென்று சேரும். மறுமார்கமாக, ஜன., 3, 10, 17 மற்றும், 24 ஆகிய தேதிகளில், வெள்ளி தோறும் இரவு, 8:30 க்கு கோட்டயத்தில் புறப்பட்டு, மறுநாள் இரவு, 11:40 க்கு கச்சிக்குடா சென்றடையும்.
காக்கிநாடா - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07155) ஜன., 6 மற்றும், 13ம் தேதியும், மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07156) ஜன., 8 மற்றும், 15ம் தேதியும் இயங்கும். நரசாபுரம் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07157) ஜன., 20 மற்றும், 27ம் தேதியும், மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் ஜன., 22 மற்றும் 29ம் தேதியும் இயங்கும்.