/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் சி.ஆர்.ஆர்.டி. தொடர் சிகிச்சை
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் சி.ஆர்.ஆர்.டி. தொடர் சிகிச்சை
ரேவதி மெடிக்கல் சென்டரில் சி.ஆர்.ஆர்.டி. தொடர் சிகிச்சை
ரேவதி மெடிக்கல் சென்டரில் சி.ஆர்.ஆர்.டி. தொடர் சிகிச்சை
ADDED : நவ 27, 2025 02:19 AM
திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரிலுள்ள ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
சிறுநீரக மாற்று திட்டத்தை, சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஹரீஷ் சிவஞானம், தியாகராஜன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள், மருத்துவ குழுவினருடன் இணைந்து செயல்படுத்துகின்றனர்.
மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின், கிருமி கட்டுப்படுத்தப்பட்ட பராமரிப்புக்காக பிரத்யேக 'போஸ்ட் டிரான்ஸ்பிளாண்ட் ஸ்யூட்' எனப்படும் அதிநவீன கண்காணிப்பு சாதனங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் சி.ஆர்.ஆர்.டி. (தொடர்ச்சியான சிறுநீரக மாற்று சிகிச்சை) வசதி கொண்ட ஒரே மருத்துவமனை, ரேவதி மெடிக்கல் சென்டர். செப்சிஸ் போன்ற ஆபத்தான சூழல்களில், குறைந்த ரத்த அழுத்தத்துடன் இருக்கும் நோயாளிகளுக்கு, வழக்கமான டயாலசிஸ் ஆபத்தானது. இத்தகைய நேரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் சி.ஆர்ஆர்.டி. தொழில்நுட்பம், உயிர் காக்கும் முறையாக செயல்படுகிறது.
திருப்பூர் தொழிலாளர்கள், தங்கள் வேலையையும், வருவாயையும் இழக்காமலிருக்க, ரேவதி மெடிக்கல் சென்டர் சி.ஏ.பி.டி. எனும் வீட்டிலேயே செய்யும் டயாலசிஸ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், வீட்டிற்கே வந்து, பாதுகாப்பாக டயாலசிஸ் சேவை மேற்கொள்கின்றனர். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் வாயிலாகவும், டயாலசிஸ் பைகள் இலவசமாக வீட்டிற்கே வந்து வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
டாக்டர் ஹரீஷ் சிவஞானம் கூறுகையில், ''டயாலசிஸ் முதல் மாற்று சிகிச்சை வரை அனைத்து சேவைகளையும், ஒரே இடத்தில், ஒரே நோக்கத்துடன், சிறுநீரக நோயாளிகளுக்கு, முழுமையான பராமரிப்பு சூழலை உருவாக்குவதே எங்கள் லட்சியம்,'' என்றார்.

