/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடோன்களில் கொப்பரை இருப்பு அதிகரிப்பு; விலையை எதிர்பார்த்து காத்திருப்பு
/
குடோன்களில் கொப்பரை இருப்பு அதிகரிப்பு; விலையை எதிர்பார்த்து காத்திருப்பு
குடோன்களில் கொப்பரை இருப்பு அதிகரிப்பு; விலையை எதிர்பார்த்து காத்திருப்பு
குடோன்களில் கொப்பரை இருப்பு அதிகரிப்பு; விலையை எதிர்பார்த்து காத்திருப்பு
ADDED : பிப் 20, 2024 10:52 PM
உடுமலை;விலையில் நீண்ட காலமாக மாற்றம் இல்லாமல் தொடர்வதால், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 62 ஆயிரம் ெஹக்டேருக்கு அதிகமான பரப்பில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள சாகுபடி பரப்பில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரமும், கொப்பரை உற்பத்தியில், காங்கேயம் வட்டாரமும் முன்னிலையில் உள்ளன. கொப்பரை வர்த்தகம் அடிப்படையிலேயே தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொப்பரைக்கு போதிய விலை கிடைக்கவில்லை. கிலோவுக்கு, அதிகபட்சமாக, 110 ரூபாய் வரை விலை கிடைத்து வந்த நிலை மாறி, கிலோ, 90 ரூபாயை எட்டுவதே கடினமாகியுள்ளது.
நோய்த்தாக்குதலால், உற்பத்தி பாதித்த நிலையில், விலை சரிவால், விவசாயிகள் திணறி வருகின்றனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்திலும், 100க்கும் மேற்பட்ட உலர்கலங்களில் கொப்பரை உற்பத்தியாகிறது. விலையில் நீண்ட காலமாக மாற்றம் இல்லாததால், பெரும்பாலானவர்கள் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்து, நிலையை சமாளிக்கின்றனர். அவ்வகையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மட்டும், நுாறு கிலோ 5 ஆயிரம் கொப்பரை மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், விலையில் மாற்றம் ஏற்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மீண்டும் ஆதார விலை அடிப்படையில், கொள்முதல் மையம் அமைத்து, விவசாயிகளிடமிருந்து, தமிழக அரசு கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

