/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூறாவளி காற்று 2,000 வாழை நாசம்
/
சூறாவளி காற்று 2,000 வாழை நாசம்
ADDED : ஏப் 12, 2025 11:14 PM

அவிநாசி: அவிநாசி தாலுகா, செம்பியநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட கந்தம்பாளையம் கிராம பகுதியில் உள்ள செட்டி தோட்டத்தில் சுப்பிரமணியன், 69, என்பவர் நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார். கணேசன் 50, என்பவரும் செட்டி தோட்டம் பகுதியில் நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார்.
இருவரும் சேர்ந்து 4000க்கும் மேற்பட்ட வாழைகள் பயிரிட்டு இருந்தனர். நேற்று முன்தினம் அவிநாசி பகுதியில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்று வீசியது.
செட்டி தோட்டம் பகுதியில் சுப்பிரமணியன், கணேசன் ஆகியோரது வாழைகள் முறிந்து விழுந்தன. 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 வாழைகள் முறிந்து முற்றிலும் சேதமானது.
வாழை சேதம் குறித்து தகவல் அறிந்த வி.ஏ.ஓ., சுதாகர், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

