/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆன்மிகம் பெருகும் ஆடி மாதம்; தட்சிணாயணமும் துவக்கம்
/
ஆன்மிகம் பெருகும் ஆடி மாதம்; தட்சிணாயணமும் துவக்கம்
ஆன்மிகம் பெருகும் ஆடி மாதம்; தட்சிணாயணமும் துவக்கம்
ஆன்மிகம் பெருகும் ஆடி மாதம்; தட்சிணாயணமும் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 11:19 PM
திருப்பூர்; ஆன்மிக வழிபாடுகளை கொண்ட ஆடிமாதம் இன்று பிறக்கிறது; தட்சிணாயணம் இன்று துவங்குகிறது.
தமிழ் மாதங்களில் உள்ள 12 மாதங்களில், ஒவ்வொரு மாதமும், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. தட்சிணாயணத்தின் துவக்கமாகிய ஆடி மாதம், பல்வேறு விழாக்களை கொண்டாடும் புனித மாதம் என்று, ஹிந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஆடிவெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக-கருட பஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிமாத உபகர்மா, வளையல் அலங்காரபூஜை, சுமங்கலிகளின் விளக்கு பூஜை, ஆடி மாத செவ்வாய் வழிபாடு, கிராமதேவைகளுக்கு பத்து நாட்கள் உற்சவம், ராகிக்கூழ், ஆடிப்பட்டம் தேடி விதைப்பது, தட்சிணாயண புனித காலம் துவக்கம், குலதெய்வ வழிபாடு, கஜேந்திர மோட்சம் நடந்த மாதம், ஆண்டாள் அவதாரம் என, பல்வேறு சிறப்புகளை பெற்றது ஆடிமாதம்.
தமிழ்மாதங்களில், அதிகப்படியான வழிபாட்டு விழாக்களை கொண்ட ஆடிமாதம் இன்று பிறக்கிறது. ஆடிமாதம் முதல் வெள்ளியான நாளை (18 ம் தேதி), அம்மன் கோவில்களில் அலங்காரபூஜையும், கூட்டு வழிபாடும் களைகட்டப்போகிறது.