/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணை பூங்காவில் புதர்கள் அகற்றம்: கிடப்பில் போட்ட மேம்பாட்டு திட்டம்
/
அணை பூங்காவில் புதர்கள் அகற்றம்: கிடப்பில் போட்ட மேம்பாட்டு திட்டம்
அணை பூங்காவில் புதர்கள் அகற்றம்: கிடப்பில் போட்ட மேம்பாட்டு திட்டம்
அணை பூங்காவில் புதர்கள் அகற்றம்: கிடப்பில் போட்ட மேம்பாட்டு திட்டம்
ADDED : பிப் 18, 2024 10:29 PM

உடுமலை:அமராவதி அணைப்பூங்காவில், புதர்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில், இதர வசதிகளையும் கோடை விடுமுறைக்கு முன், மேம்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள, அமராவதி அணை, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஆனால், அணைப்பூங்கா நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.
பூங்காவில், பரிதாப நிலையிலுள்ள, சிலை, நீரூற்று, இருக்கைகளை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணியர் திரும்பிச்செல்கின்றனர்.
பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறைக்கு இப்பிரச்னை குறித்து, பல முறை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், பருவமழைக்கு பிறகு, பூங்கா முழுவதும் புதர் மண்டி, விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து, தற்போது பூங்காவில் காணப்படும், புதர்களை மட்டும் அகற்றும் பணி, பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், பிற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எவ்வித பணிகளும் துவங்கவில்லை. வரும் கோடை விடுமுறைக்கு முன், அமராவதி அணை பூங்காவை மேம்படுத்தி, சுற்றுலா பயணியருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இதனால், சுற்றுலா பயணியர் எண்ணிக்கையும், சுற்றுலா சார்ந்த வர்த்தகமும் அப்பகுதியில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

