/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சரக்கு லாரிகளால் பாதிப்பு; நேரக்கட்டுப்பாடு அவசியம்
/
சரக்கு லாரிகளால் பாதிப்பு; நேரக்கட்டுப்பாடு அவசியம்
சரக்கு லாரிகளால் பாதிப்பு; நேரக்கட்டுப்பாடு அவசியம்
சரக்கு லாரிகளால் பாதிப்பு; நேரக்கட்டுப்பாடு அவசியம்
ADDED : ஜன 22, 2025 07:50 PM
உடுமலை; உடுமலை நகர ரோடுகளில், கன ரக வாகனங்கள், பார்சல் சர்வீஸ் வாகனங்கள் வாகன போக்குவரத்து மிகுந்த நேரங்களில் இயக்கப்படுவதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
உடுமலை நகரில் பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகள் மற்றும் சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, கல்பனா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.
இங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள், பார்சல் சர்வீஸ் லாரிகள், அனைத்து நேரங்களிலும், நடுரோட்டில் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படுகிறது.
வாகன போக்குவரத்து மிகுந்த நேரங்களில், ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே, நகரிலுள்ள குறுகலாக ரோடுகளில், பெரிய அளவிலான லாரிகள் வர தடை விதிக்க வேண்டும். சரக்குகள் சிறிய வாகனங்களுக்கு மாற்றி, கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் செல்லும் நேரங்கள், பொதுமக்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் இயங்கும் நேரங்களில், சரக்கு வாகனங்கள் நகர ரோடுகளுக்கும் நுழைய தடை விதிக்க வேண்டும்.
போக்குவரத்து பாதிப்பு இல்லாத நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில், கடைகளுக்கு சரக்கு இறக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, உரிய அறிவிப்பு பலகைகள் ரோடுகளில் வைப்பதோடு, விதி மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.