/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் ஓடு தளம் சேதம்; பொதுமக்கள், பயணியர் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்ட் ஓடு தளம் சேதம்; பொதுமக்கள், பயணியர் பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் ஓடு தளம் சேதம்; பொதுமக்கள், பயணியர் பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் ஓடு தளம் சேதம்; பொதுமக்கள், பயணியர் பாதிப்பு
ADDED : அக் 29, 2024 09:02 PM

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட், குண்டும், குழியுமாக காணப்படுவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து, 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஏறத்தாழ, 15 ஆயிரம் பயணியர் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கான, இருக்கை, குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் இல்லை.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகங்களிலிருந்து கழிவு நீர் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் வெளியேற்றப்படுவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
பஸ் ஸ்டாண்ட் முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் குழி ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி வருகிறது. இதனால், பஸ்கள் குழியில் இறங்கி விபத்துக்குள்ளாவதோடு, அவசரமாக பஸ் ஏற வரும் பயணியர், குழிகள் தெரியாமல், விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
எனவே, பஸ் ஸ்டாண்ட் ஓடு தளத்தை புதுப்பிக்கவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.