/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திரிசங்கு' நிலையில் அணைப்பாளையம் பாலம்! கட்டுமானப் பணி துவங்குவது எந்தக் காலம்?
/
'திரிசங்கு' நிலையில் அணைப்பாளையம் பாலம்! கட்டுமானப் பணி துவங்குவது எந்தக் காலம்?
'திரிசங்கு' நிலையில் அணைப்பாளையம் பாலம்! கட்டுமானப் பணி துவங்குவது எந்தக் காலம்?
'திரிசங்கு' நிலையில் அணைப்பாளையம் பாலம்! கட்டுமானப் பணி துவங்குவது எந்தக் காலம்?
ADDED : செப் 26, 2024 05:53 AM
திருப்பூர்: நொய்யல் ஆற்றின் குறுக்கே, பாலம் அமைக்கும் பணியில் ஏற்பட்ட சிக்கலுக்கு, 17 ஆண்டு இழுபறிக்கு பின் தீர்வு கிடைத்தும், நிதி ஒதுக்கீடு கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது.
திருப்பூரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து, நெரிசல் அதிகரித்து வருகிறது. நகர சாலைகளில் நெரிசல் மற்றும் விபத்து நேரிடுவதை தவிர்க்க, மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு, பி.என்.,ரோடு, அவிநாசி ரோடு, காங்கயம் மற்றும் ஊத்துக்குளி ரோடுகளை இணைக்கும் வகையில், 4.9 கி.மீ., சுற்றளவில், ரிங் ரோடு அமைக்கும் பணி கடந்த, 2006ல், துவங்கியது.
இதில், மங்கலம் ரோடு மற்றும் காலேஜ் ரோடுகளை இணைக்கும் வகையில், அணைப்பாளையம் பகுதியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டவும், தண்டவாளத்தின் குறுக்கே, ரயில்வே மேம்பாலம் கட்டவும், 19.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமானம் மேற்கொள்ள, தனியாருக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருந்தது.
நில உரிமையாளர்களுக்கு அதுதொடர்பான 'நோட்டீஸ்' வழங்கி, நிலம் கையகப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் (கட்டுமானம்) ஈடுபட்டனர். அதே நேரம், கட்டுமானப்பணியும் துவங்கியது. ஆனால், கட்டுமானப்பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தொய்வு ஏற்பட்டது.
நிலம் கையகப்படுத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் கோர்ட்டில் வழக்கும் தொடுத்தனர். இந்த நடவடிக்கையை அரசு விரைவுப்படுத்தி, சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பலரும் எதிர்பார்த்தனர்.
நெடுஞ்சாலைத்துறை (பராமரிப்பு மற்றும் திட்டங்கள்) அதிகாரிகள் கூறியதாவது:
பாலம் கட்டுமானப்பணிக்கு நிலம் எடுப்பு தொடர்பாக பலரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், அங்கு கட்டுமானப்பணி தொடர்பாக திட்டம் வடிவமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதனால், வடிவமைப்பு மாற்றம், கூடுதல் நிதி உள்ளிட்ட தேவை தொடர்பாக, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பணி துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நொய்யல் ஆற்றின் குறுக்கே, பாலம் அமைக்கும் பணியில் ஏற்பட்ட சிக்கலுக்கு, 17 ஆண்டு இழுபறிக்கு பின் தீர்வு கிடைத்தும், நிதி ஒதுக்கீடு கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது.

