/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காத்திருக்கும் ஆபத்து; அதிகாரிகள் 'குறட்டை'
/
காத்திருக்கும் ஆபத்து; அதிகாரிகள் 'குறட்டை'
ADDED : நவ 26, 2025 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: அவிநாசிபாளையம் - ஒட்டன்சத்திரம் ரோடு சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவ்வழியாக தினமும், பல வாகனங்கள் கடந்து செல்கின்றன. கொடுவாயில் ரோட்டோரம் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்தால் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக பள்ளத்தை சீரமைத்து, சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

