ADDED : பிப் 10, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையத்தில், கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம மக்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த அலுவலக கட்டடம் பலத்த சேதம் அடைந்துள்ளது. மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இது தபால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது கட்டடத்தை சீரமைக்க வேண்டும்.