sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லாங்குழி சாலையில் ஆபத்தான பயணம்!

/

பல்லாங்குழி சாலையில் ஆபத்தான பயணம்!

பல்லாங்குழி சாலையில் ஆபத்தான பயணம்!

பல்லாங்குழி சாலையில் ஆபத்தான பயணம்!


ADDED : ஜன 08, 2025 12:21 AM

Google News

ADDED : ஜன 08, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்வாய் அடைப்பு

பல்லடம் நகராட்சி, நான்காவது வார்டு, குமரன் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. அருகில் உழவர் சந்தை உள்ளது. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

- சேகர், பல்லடம்.

எரியாத விளக்கு

அவிநாசி ரோடு, சி.எஸ்.ஐ., சர்ச் பின்புறம், இந்திரா நகர் இரண்டாவது வீதியில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- சுப்பு, இந்திரா நகர். (படம் உண்டு)

ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ரயில்வே பாலத்தில் பத்துக்கு மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. பலமுறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்வதே இல்லை.

- சங்கர்சதிஷ், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)

தவறான அறிவிப்பு?

திருப்பூர், கருவம்பாளையம், எலிமென்டரி பள்ளி வீதியில் அறிவிப்பு பலகை தவறாக பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி கவனிக்க வேண்டும்.

- ராஜவேல், எஸ்.ஆர்., நகர். (படம் உண்டு)

கழிவுநீர் தேக்கம்

திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக் கல்லுாரி எதிர்புறம், ஐ.டி.ஐ., ஸ்டாப்பில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பாதசாரிகள் நிற்க கூட வழியில்லாமல் உள்ளது.

- ராஜேந்திரன், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)

பல்லாங்குழி சாலை

வீரபாண்டியில் இருந்து கோவில்வழி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பாதி ரோடு மட்டும் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- சத்தியபிரியா, கோவில்வழி. (படம் உண்டு)

ஆத்துப்பாளையம் - அனுப்பர்பாளையம், மார்க்கெட் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- விஜி, ஆத்துப்பாளையம். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருப்பூர், பெரிச்சிபாளையம், அன்னமார்கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

- மாரியப்பன், பெரிச்சிபாளையம். (படம் உண்டு)

இப்படியா வைப்பது?

அவிநாசி அருகே திருப்பூர் ரோடு, பை-பாஸ் ரோடு பாலத்தின் கீழ் பிளக்ஸ் பேனர்கள் வளைவில் வைக்கப்படுகிறது. வாகனங்கள் திரும்பும் போது, வேறு வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது.

- ஜெய்சங்கர், அவிநாசி. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், 23வது வார்டு, ஆர்.எஸ்.,புரம், செல்வவிநாயகர் கோவில் எதிர்புறம் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- பாண்டியராஜன், ஆர்.எஸ்.,புரம். (படம் உண்டு)

-------------------------

ரியாக் ஷன்

முட்புதர் அகற்றம்

திருப்பூர், 17வது வார்டு, எம்.எஸ்., நகர், நால்ரோட்டில் குடிநீர் தொட்டியை சுற்றி முட்புதர் வளர்ந்திருந்தது. 'தினமலர்' செய்தியை தொடர்ந்து, முட்புதர் அகற்றப்பட்டு விட்டது.

- ரஞ்சித், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)

குப்பை அகற்றம்

திருப்பூர், 27வது வார்டு, வெங்கடேஸ்வரா நகரில் குப்பை தேங்கியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழ் செய்தியால், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை அகற்றி விட்டனர்.

- ரவி, வெங்கடேஸ்வரா நகர். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us