/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாதித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்க முடிவு
/
சாதித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்க முடிவு
சாதித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்க முடிவு
சாதித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்க முடிவு
ADDED : மே 11, 2025 01:00 AM
திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், 3,074 அரசு மேல்நிலைப்பள்ளிகள், நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய, 7.92 லட்சம் பேரில், 7.53 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்; மாநில தேர்ச்சி சதவீதம், 95.03. கடந்த, 2023ல் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 94.56 ஆக இருந்தது.
நடப்பாண்டு, 0.47 சதவீதம் உயர்ந்து, 95.03 ஆனது. மொத்தமுள்ள 7,513 மேல்நிலைப்பள்ளிகளில், 3,074 மேல்நிலைப்பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
இப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியாக, நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த பள்ளிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை விபரம் தொகுக்கப்பட்டு வருகிறது.
வரும், 20ம் தேதிக்குள், இவ்விபரங்கள் விரிவாக அரசுக்கு சமர்பிக்கப்பட்டு, புதிய கல்வியாண்டு துவங்கும் முன்பாக ஆசிரியர், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் வெளிவந்துள்ளதால், அதற்கான முன்னெடுப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன,' என்றனர்.