/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் 3ம் தேதி கடையடைப்பு நடத்த முடிவு
/
அவிநாசியில் 3ம் தேதி கடையடைப்பு நடத்த முடிவு
ADDED : டிச 01, 2024 01:01 AM
அவிநாசி: சொத்து வரி உயர்வை கண்டித்தும், வணிகப் பயன்பாட்டிலுள்ள கட்டட வாடகைக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்தும் அவிநாசியில், வரும் டிச., 3ம் தேதி கடையடைப்பு நடத்தப்படுகிறது.
அவிநாசியிலுள்ள அனைத்து வணிகர் சங்கம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், சிறு வியாபாரிகள், ஹோட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். வணிகர்களின் இந்த பாதிப்பை சரி செய்ய ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானத்தை ஒத்திவைத்து முழுமையாக நீக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, அனைத்து வணிகர் சங்கம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வரும், டிச., 3ம் தேதி அவிநாசியில், ஒரு நாள் கடையடைப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

