ADDED : பிப் 22, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பு சீசனில் பட்டுக்கூடுகளுக்கு விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ சராசரியாக, 400 ரூபாய்க்கே விலை போகிறது.
பட்டு நுால் விலை சரிவடைந்ததே இதற்கு முக்கிய காரணம். வறட்சி தலைதுாக்க துவங்கி உள்ளது. பட்டுப்புழுக்களுக்கு தேவையான மல்பெரி செடிகள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வருகின்றன. கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தியை குறைக்க துவங்கி உள்ளனர். இதனால், வரும் மாதங்களில் பட்டுக்கூடு உற்பத்தி சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.