/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் மத்தியில் குறைந்து வரும் இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்ட விழிப்புணர்வு
/
தொழிலாளர் மத்தியில் குறைந்து வரும் இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்ட விழிப்புணர்வு
தொழிலாளர் மத்தியில் குறைந்து வரும் இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்ட விழிப்புணர்வு
தொழிலாளர் மத்தியில் குறைந்து வரும் இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்ட விழிப்புணர்வு
ADDED : ஏப் 15, 2025 11:50 PM
திருப்பூர்; லட்சக்கணக்கான தொழிலாளர்களிடம் இருந்து சந்தா வசூலிக்கப்பட்டாலும், இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்டங்கள் குறித்து, திருப்பூரில் போதிய விழிப்புணர்வு இல்லையென, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் சார்ந்துள்ள பிற தொழில்களில், எட்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள். தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய, வடமாநில தொழிலாளர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இருப்பினும், அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு மற்றும் காப்பீடு விவரங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. வருங்கால வைப்பு நிதி பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பும் இல்லை.
வடமாநில தொழிலாளர் மட்டுமல்ல, திருப்பூரின் நிரந்தர தொழிலாளர்கள் மத்தியிலும், இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வும், பின்தொடர்ச்சியும் இல்லை.
பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் மட்டும், தொழிலாளர் நலத்துறை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கட்டுப்பாட்டால், அரசு திட்டங்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்றன.
மற்ற நிறுவனங்களில், இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. திருப்பூரில் உள்ள தொழிலாளர்களில், 10 சதவீதத்துக்கும் குறைவான தொழிலாளர்கள் மட்டுமே, இத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.
இதேபோல், சில ஆண்டு இடைவெளியில், வேறு நிறுவனங்களுக்கு மாறிச்செல்கின்றனர். அப்போது, ஒரு நிறுவனத்தில் துவங்கியிருந்த பி.எப்., கணக்கை, வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வசதி இருக்கிறது.
இருப்பினும், அதுபோன்ற சலுகைகளை, தொழிலாளர்கள் பயன்படுத்துவதில்லை. அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கு இடையே, இ.ஸ்.ஐ., மற்றும் பி.எப்., திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
திருப்பூரில் உள்ள இ.எஸ்.ஐ., திட்ட அலுவலர்களும், பி.எப்., அலுவலர்களும், தொழிலாளர்களுக்கான சேவையையும், விழிப்புணர்வையும் அவர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பி.எப்., அலுவலகத்தில், தொழிலாளர்கள் சென்று யாரையும் பார்த்து, பேச வாய்ப்பே இல்லை என்றாகிவிட்டது. மாதாந்திர குறைகேட்பு நடப்பது குறித்தும், தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்படாத நிலை தொடர்கிறது.
பயன் குறித்துவிளக்க வேண்டும்
சம்பத், மாவட்ட செயலாளர், சி.ஐ.டி.யு., பனியன் சங்கம்:
'பீஸ்ரேட்' மற்றும் கான்ட்ராக்ட்' தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ., கட்டாயம். பீஸ்ரேட் முறையை ஊக்குவிப்பதால், தொழிலாளர் நிரந்தரமாக இருப்பதில்லை; அடிக்கடி மாறுகின்றனர். இதனால், இ.எஸ்.ஐ., திட்டத்தை தொழிலாளர் விரும்புவதில்லை என, பனியன் நிறுவனங்கள் கூறிவிடுகின்றன.
இ.எஸ்.ஐ., சந்தா பிடித்தாலும் கூட, தொழிலாளர்களுக்கு பதிவு எண் கூட கிடைப்பதில்லை. இதனால், பணம் பிடிக்க வேண்டாமென கூறிவிடுகின்றனர். இ.எஸ்.ஐ., திட்டத்தால் என்ன பயன், குடும்பத்துக்கு என்ன பயன் என்பது முதலில் தெரிய வேண்டும்; அப்போதுதான், தொழிலாளர்கள் பயன்பெற முடியும். கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தகவல் பலகைஅவசியம் வேண்டும்
முத்துசாமி, உள்ளூர் இ.எஸ்.ஐ., கமிட்டி உறுப்பினர், எச்.எம்.எஸ்., திருப்பூர்:
இ.எஸ்.ஐ., கமிட்டி கூட்டத்தில், இ.எஸ்.ஐ., திட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். அதிகாரிகளும், தொழிலாளர்களை இணைக்குமாறு கூறுகின்றனர்.
அடுத்தகட்டமாக, என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகிறோம். நிறுவனங்களில் மனித வள மேம்பாட்டு மேலாளர்களை அழைத்து பேசியுள்ளோம். பனியன் நிறுவனங்கள் விருப்பம் காட்டுவதில்லை.
இத்திட்டம் குறித்து, நிறுவனங்களில் விழிப்புணர்வு தகவல் பலகை வைக்க வேண்டும். அதிகபட்சமாக பயன் இருந்தும், அதுகுறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை.
தகவல் தெரிந்தவர்கள், முறையாக பயன்படுத்தி வருகின்றனர். 'கான்ட்ராக்ட்' மற்றும் 'பீஸ்ரேட்' முறைக்கு இ.எஸ்.ஐ., கட்டாயம்; போனசும் வழங்கப்பட வேண்டும். இருந்தாலும், விழிப்புணர்வு இல்லாமல், தொழிலாளரே வேண்டாமென ஒதுங்கி விடுகின்றனர்.
தொழிலாளர் ஒருவர், வீட்டில் இருந்து
புறப்பட்டு வந்ததில் இருந்து,
பணியிடத்துக்கு வந்து பணியாற்றுவது மற்றும் பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி செல்வது வரை, இ.எஸ்.ஐ.,
திட்டத்தில் காப்பீடு கிடைக்கிறது. இடையே விபத்து ஏற்பட்டாலும், அதற்கேற்ப
இழப்பீடு கிடைக்கும்