/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்திர பதிவு நடக்கவில்லை: பொதுமக்கள் ஏமாற்றம்
/
பத்திர பதிவு நடக்கவில்லை: பொதுமக்கள் ஏமாற்றம்
ADDED : பிப் 03, 2025 07:00 AM

உடுமலை : விடுமுறை நாளில், சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என்ற உத்தரவு உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பின்பற்றப்படாமல், பூட்டியிருந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
அசையாச் சொத்து ஆவண பதிவுகளை, மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள மக்கள் விரும்புவதால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும் என, தமிழக பதிவுத்துறை தலைவர் தினேஷ் என தெரிவித்திருந்தார்.
ஆனால், உடுமலை சார்பதிவாளர் அலுவலகம் நேற்று திறக்கப்படவில்லை. இதனால், பதிவு மற்றும் இதர விபரங்களை தெரிந்து கொள்ள, சார்பதிவாளர் அலுவலகம் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
*கிணத்துக்கடவு சார் பதிவாளர் அலுவலகம் நேற்று திறக்கப்படவில்லை.
கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகம் பூட்டியே இருந்தது.
இதுகுறித்து, பத்திரபதிவு எழுத்தர்கள் கூறியதாவது:
கிணத்துக்கடவு பகுதியில் அதிகளவு ரியல் எஸ்டேட் தொழில் நடந்து வருகிறது. இதில் நாள்தோறும் சார் பதிவாளர் அலுவலகத்தில், 100 டோக்கன்கள் வரை பத்திர பதிவு நடக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை நாளில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளர் சங்கம் சார்பில், அலுவலகத்திற்கு யாரும் வரவில்லை. மேலும், மற்ற நாட்களில் டோக்கன்கள் இலவசமாக வழங்கப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நாளன்று, ஒரு டோக்கன் ஆயிரம் ரூபாயாக இருக்கும்.
இப்படி இருக்கும் பட்சத்தில், பத்திரப்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கும். மற்றும் விடுமுறை நாட்களில் பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வம் இன்றி உள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.