sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஞானம் தரும் திருவிழா தீபாவளி ஆன்மிக பெரியோரின் ஆசி

/

ஞானம் தரும் திருவிழா தீபாவளி ஆன்மிக பெரியோரின் ஆசி

ஞானம் தரும் திருவிழா தீபாவளி ஆன்மிக பெரியோரின் ஆசி

ஞானம் தரும் திருவிழா தீபாவளி ஆன்மிக பெரியோரின் ஆசி


ADDED : அக் 19, 2025 10:17 PM

Google News

ADDED : அக் 19, 2025 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: 'நிலையான மெய்ப்பொருளை உணர்தலே உண்மை தீபாவளி ஆகும். அந்த வகையில் தீபாவளி ஞானத் திருவிழாவாகும்; இத்திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவோம்,' என ஆன்மிக பெரியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சந்தோஷம் தரும் நாள் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், 23வது மடாதிபதி, ஸ்ரீவில்லிப்புத்துார்: பல யுகங்களை கடந்து, இன்றும் தீபாவளி கொண்டாடப்படுவது நம் பாரம்பரியத்தின் மேன்மையை குறிக்கிறது. நமக்கு பாவங்களை நீக்கி, சந்தோஷத்தை தரும் பரிகாரங்களாக பண்டிகைகள் இருப்பதாக ரிஷிகள் குறிப்பிடுகிறார்கள்.

நித்திய கர்மாவால் பாவத்தை நீக்கலாம். பண்டிகை நாட்களில் அன்னதானம், வஸ்திரதானம், ஆராதனை, பூஜை, தேவதா வழிபாடு என புண்ணிய செயல்களின் தொகுப்பு நம் வாழ்நாளை மேம்படுத்தும்.

சந்தோஷத்தில் நம் தோஷங்கள் தீரும். இத்தகைய நன்னாளில் திருமாலின் திருவுள்ளத்தால் அனைவர் வாழ்விழும் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வோடு வாழ வேண்டும்.

நல்ல எண்ணம் வளரும் சாத்சாத் கிருதாநந்த சரஸ்வதி சுவாமிகள், சுவாமி தயானந்த ஆசிரமம், ரிஷிகேஷ்: பரந்த இந்த பூமிக்கு, பாரத தேசம் ஒளி விளக்காக, கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. மனிதனாக பிறந்தவன் மகானாக உயர, பாரதத்தை நோக்கி பயணப்பட்டு தான் ஆக வேண்டும். வாழ்வின் ஆதாரம் தன்னை உணர்வதே என்பதை நினைவுபடுத்த, பல பண்டிகைகளை சனாதன தர்மம் நிகழ்த்துகிறது. அந்த வகையில் தீபாவளி ஞானத்திருவிழாவாகும். கெட்ட எண்ணங்களை புத்தியால் புரிந்து, நல்ல எண்ணங்களை வளர்த்து, அகத்தில் ஞானதீபம் ஏற்றவேண்டும்.

அதற்கு தன்னை உணரச் செய்யும் பேராற்றல் கொண்ட, தன்னை உணர்ந்த குருவை நாடி, உபதேசம் பெற்று இறைவனை சரணடைதலே முத்திப்பேராகும்.

அறியாமை என்னும் பிசுக்கை, நல்உபதேசம் என்னும் நல்லெண்ணெய் தேய்த்து, விசாரம் என்னும் அரப்பால் பிசுக்கு தேய நீராடி, ஆனந்தத்தோடு ஆடை அணிகலன்கள் அணிந்து, ஆலயம் சென்று தொழுது, பிறவிப்பிணி நீக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் திருநாளே தீபாவளி திருநாள் ஆகும்.

அன்னபூரணி உலா ஸ்ரீ முக்தானந்த் புரி மகராஜ், காசி: தேசம் எங்கும் துளித்துளியாய் நிறைந்திருக்கும் அத்தனை நீரும், தீபாவளி திருநாளன்று அது கங்கையாகவே மாறுகின்றது. செல்வச்செழிப்பை நல்கும் மகாலட்சுமி பிறந்த தினம் ஆன தீபாவளி திருநாளில், இல்லங்களில் இன்பம் பொங்க மகிழ்வோடு கொண்டாடுவோம்.

இந்நாளில்சுற்றத்தார்களையும், ஏழை எளியவர்களையும் மகிழ்விக்கின்றனர். காசியிலே அருள் பாலிக்கும் அன்னபூரணி தேவி, உலகம் தழைக்க நாடெங்கும் திருஉலா வரும் நாளாக, இந்த தீபாவளி திருநாளை மக்கள் கொண்டாடுகின்றனர்.

இது ஞானத்திருவிழா! பூஜ்ய ஸ்ரீ ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள், ஆர்ஷவித்யா பீடம், ஆனைமலை: மாய உலகம், தேய்கின்ற உடம்பு, அலைகின்ற மனம் இவற்றையும் கடந்து, கடவுளை உணருகின்ற யுக்தி நம்முடைய சாஸ்திரங்கள் வழியாக போதிக்கப்படுகிறது.

நிலையான மெய்ப்பொருளை உணர்தலே உண்மை தீபாவளி ஆகும். அந்த வகையில் தீபாவளி ஞானத்திருவிழாவாகும்.

அசுர எண்ணங்களை, தெய்வ சிந்தனையால் அகற்றி, துாய எண்ணத்துடன் அறவழியில் வாழ்ந்து, கிருஷ்ணர் காட்டும் பாதையில் வாழ்வோம். வீட்டில் தீபம் ஏற்றி, நம் அகத்திலும் ஞான தீபம் ஏற்றுவோம். இனிய சொற்களை இனிப்புகளாக பரிமாறுவோம்.

விருந்தோம்பி, புத்தாடை உடுத்தி, செல்வத்தை பகிர்ந்தளித்து வசந்த விழாவாக தீபாவளியை கொண்டாடுவோம். நம் தேசமெங்கும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும்.

இது ஒளியின் திருநாள்! ஜெகதாத்மாநந்த சரஸ்வதி சுவாமிகள்,ஆர்ஷ வித்யா குருகுலம்,ஆனைகட்டி.: தீபாவளி என்பது ஒளியின் திருநாள், என்பது வெறும் விளக்குகள் வரிசையாக ஏற்றுவது மட்டுமல்ல; அது நம் உள்ளத்தின் அறிவொளியை எழுப்பும் புனிதமான வழிபாடு.

எப்போது நம் சிந்தனைகள் ஒருமுகப்படுத்தப்பட்டு, நம் செயல்கள் தர்மத்தின் மதிப்பால் ஒழுங்குபடுத்தப்பட்டு, குரு உபதேசத்தாலும் சாஸ்திர ஞானத்தாலும் நம் புரிதல் நன்கு உணரப்பட்டதாக இருக்கிறதோ, அப்போது நாம் ஆத்ம ஞானம் என்னும் ஒளியால் நம் உள்ளத்தையும், வெளி உலகையும் ஒளிரச் செய்கிறோம்.

ஒவ்வொரு தீபமும் அறியாமை என்னும் மயக்கத்தின் மீது தெளிவின் வெற்றியை, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியை, போரின் மீது அமைதியின் வெற்றியை, ஹிம்சையின் மீது அஹிம்சையின் வெற்றியை குறிக்கிறது.

இந்த தீபாவளி நமக்குள் அறிவு, ஒழுக்கம் மற்றும் கருணை எனும் ஒளிச் சுடர்களை கொழுந்துவிடச் செய்து, அதன் பிரகாசத்தை உலகம் முழுவதும் பரப்ப நம்மை ஊக்குவிக்கட்டும்.

தர்மத்தை நிலைநாட்ட, இன்னொரு கண்ணனின் அவதாரம் நிகழ, நாம் பிரார்த்திக்க வேண்டும். நம் வாழ்க்கைப்பாதை அறநெறி எனும் அடித்தளத்தின் மீது அமையட்டும்.






      Dinamalar
      Follow us