/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காண்டூர் கால்வாயில் விழுந்து மான் பலி
/
காண்டூர் கால்வாயில் விழுந்து மான் பலி
ADDED : ஆக 22, 2025 11:51 PM
உடுமலை: உடுமலை காண்டூர் கால்வாயில் விழுந்து கடமான் பலியானது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், காண்டூர் கால்வாயில், 4 வயது மதிக்கத்த மான் ஒன்று மிதந்து வந்து, திருமூர்த்தி அணையில் ஒதுங்கியது.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்குச்சென்ற வனத்துறையினர், மான் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனை செய்து, பாதுகாப்பாக புதைத்தனர்.
அடர்ந்த வனப்பகுதியில் காண்டூர் கால்வாய் அமைந்துள்ள நிலையில், யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் தவறி விழுந்து தொடர்ந்து பலியாகி வருகின்றன.
வன விலங்குகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிக்கவும், தவறி விழும் வன விலங்குகளை உடனடியாக மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.