/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
/
கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
ADDED : அக் 14, 2025 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான சங்கிலியான் தோட்டத்தில் 100 அடி ஆழ விவசாய கிணறு பயன்பாட்டில் உள்ளது.
நேற்று காலை இரை தேடி தோட்டத்திற்குள் புகுந்த ஒரு வயது பெண் புள்ளிமான் தவறி கிணற்றில் விழுந்தது.
கிணற்றில் தண்ணீர் இருந்ததால் சிறு காயங்களுடன் புள்ளிமான் உயிருக்கு போராடி தத்தளித்து வந்தது.
அங்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பெண் புள்ளி மானை உயிருடன் பத்திரமாக மீட்டு அவிநாசி வனகாவலர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.
காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் புள்ளிமான் விடப்பட்டது.