/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அரட்டை' செயலி வாயிலாக ஆர்டர் ரூ.100 தள்ளுபடி வழங்குது 'வால்ரஸ்'
/
'அரட்டை' செயலி வாயிலாக ஆர்டர் ரூ.100 தள்ளுபடி வழங்குது 'வால்ரஸ்'
'அரட்டை' செயலி வாயிலாக ஆர்டர் ரூ.100 தள்ளுபடி வழங்குது 'வால்ரஸ்'
'அரட்டை' செயலி வாயிலாக ஆர்டர் ரூ.100 தள்ளுபடி வழங்குது 'வால்ரஸ்'
ADDED : அக் 14, 2025 01:02 AM

திருப்பூர்;'அரட்டை' செயலி வாயிலாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு, உடனடியாக 100 ரூபாய் தள்ளுபடி சலுகை வழங்குகிறது, 'யெஸ் இந்தியா கேன் - வால்ரஸ்' நிறுவனம்.
வெளிநாட்டு செயலிகளை தவிர்த்து, உள்நாட்டு செயலியான 'அரட்டை'யை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவி வருகிறது. இதில், திருப்பூரில் உள்ள வர்த்தகர் மற்றும் கடை உரிமையாளர்களும், 'அரட்டை' செயலி வாயிலாக, ஆன்லைன் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 'அரட்டை' செயலி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கி வருகின்றனர்.
'வால்ரஸ்' நிறுவன இயக்குனர் டேவிட் கூறுகையில், ''அரட்டை செயலி பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும்; நம் நாட்டில் உருவான செயலி என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே, 'அரட்டை' செயலி வாயிலாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு, உடனடியாக, 100 ரூபாய் தள்ளுபடி வழங்கி வருகிறோம். வாடிக்கையாளரும், புதிய செயலியை பதிவு செய்ய, க்யூ.ஆர்., கோடு வசதியும் செய்து கொடுத்துள்ளோம்.
வெளிநாட்டு செயலிக்கு எதிராக சண்டையிட தேவையில்லை; 'அரட்டை' செயலியை பயன்படுத்தினால் போதும். நம் வாடிக்கையாளரையும், ஊக்குவிக்கும் வகையில், அதிரடியான தள்ளுபடி சலுகையுடன் ஆர்டர் பெற்றுவருகிறோம்,'' என்றார்.