/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டட அனுமதி வழங்க காலதாமதம்; ஊராட்சி செயலர்கள் பணி விடுவிப்பு
/
கட்டட அனுமதி வழங்க காலதாமதம்; ஊராட்சி செயலர்கள் பணி விடுவிப்பு
கட்டட அனுமதி வழங்க காலதாமதம்; ஊராட்சி செயலர்கள் பணி விடுவிப்பு
கட்டட அனுமதி வழங்க காலதாமதம்; ஊராட்சி செயலர்கள் பணி விடுவிப்பு
ADDED : ஏப் 25, 2025 07:48 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், ஆன்லைன் வாயிலாக கட்டட அனுமதி வழங்குவதில் தாமதம் செய்த 7 ஊராட்சி செயலர்களை பணியிலிருந்து விடுவிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊராட்சி பகுதிகளில் கட்டட அனுமதி மற்றும் மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்க ஆன்லைன் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கட்டட அனுமதியில் 10 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு ஊராட்சிகளில், ஆன்லைன் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மீது ஊராட்சி செயலரே 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், இதுகுறித்து ஊராட்சி செயலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுரைகள் வழங்கியது.
இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்கு மேலாகியும் கட்டட அனுமதி வழங்காத புதுப்பாளையம், சூரியநல்லுார், கணபதிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், ஜோத்தம்பட்டி மற்றும் பெரியகோட்டை ஆகிய ஏழு ஊராட்சி செயலர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
கலெக்டர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக கூடுதல் பொறுப்புக்கு செயலர்களை நியமித்து பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். உரிய அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.