/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்இணைப்பு வழங்க இழுத்தடிப்பு; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
/
மின்இணைப்பு வழங்க இழுத்தடிப்பு; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மின்இணைப்பு வழங்க இழுத்தடிப்பு; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மின்இணைப்பு வழங்க இழுத்தடிப்பு; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஏப் 02, 2025 10:14 PM

உடுமலை; விவசாய மின் இணைப்பு தர மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து, உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை, மூங்கில்தொழுவு, சிக்கனுாத்தை சேர்ந்த விவசாயி, கோவிந்தராஜ்,62, விவசாய மின் இணைப்பு கோரி, கடந்த, 2007ல், நெகமம் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆனால், பொள்ளாச்சி, பெதப்பம்பட்டி நெகமம் மின் வாரிய அலுவலகங்களுக்கு விவசாயியை அலைக்கழித்துள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் மற்றும் மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், உயர் அதிகாரிகள் உத்தரவிட்டும், மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
இதனை கண்டித்து, உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், விவசாயி கோவிந்தராஜ் குடும்பம் மற்றும் விவசாயிகள் சங்கம், இ.கம்யூ., நிர்வாகிகள் சவுந்தரராஜ், சுப்ரமணியம், கிருஷ்ணசாமி, தட்சணா மூர்த்தி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.