/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காயமடைந்தவரை மீட்பதில் தாமதம்
/
காயமடைந்தவரை மீட்பதில் தாமதம்
ADDED : நவ 14, 2025 12:14 AM

திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலரில் வந்த வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ரத்தம் சொட்ட வாலிபர் ரோட்டில் கிடந்தார்.
விபத்தை பார்த்து மக்கள் சூழ்ந்தனர். காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முன்வராமல், அனைவரும் வேடிக்கை பார்த்தனர். மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் ஸ்டாண்டில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணமாக, மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்துக்கு அருகே ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கிருந்தும் யாரும் வரவில்லை. நீண்ட நேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸ் வாலிபரை அழைத்து சென்றது. எனவே, கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒரு ஆம்புலன்ஸை நிறுத்த வேண்டும்.

