/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நவீன 'ப்ளூரோஸ்கோபி' கருவி தருவிப்பு
/
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நவீன 'ப்ளூரோஸ்கோபி' கருவி தருவிப்பு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நவீன 'ப்ளூரோஸ்கோபி' கருவி தருவிப்பு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நவீன 'ப்ளூரோஸ்கோபி' கருவி தருவிப்பு
ADDED : நவ 11, 2025 12:44 AM

திருப்பூர்: உடலின் உள் உறுப்புகளின் இயக்கத்தை துல்லியமாக காட்டும் நவீன 'ப்ளூரோஸ்கோபி' எக்ஸ்ரே கருவி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தருவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் இனி, உடனுக்குடன் துல்லிய முடிவுகளை அறிந்து, உயர் சிகிச்சை தாமதமின்றி பெற முடியும்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை நாடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.
தினசரி புறநோயாளி பிரிவுக்கு, 1,950 பேர் வருகின்றனர். உற்நோயாளிகளாக, 45 - 65 பேர் அனுமதியாகின்றனர்; 35 - 45 குழந்தைகள் பிறக்கின்றன. 15 - 25 பேர் விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு அனுமதியாகின்றனர்.
பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியான பின், பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் எக்ஸ்ரே, ஸ்கேன், தேவையிருப்பின் எம்.ஆர்.ஐ. எடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கை, கால் அடிபட்டவர், நோய் வாய்ப்பட்டவர்கள், குழந்தைகளுக்கும் எக்ஸ்ரே, அல்ட்ரா ஸ்கேன் தவிர்க்க முடியாததாக உள்ளது.இத்தகைய சிகிச்சைகள் துல்லியத்தன்மையுடன் இருக்க, 'பிளோரோஸ்கோபி' அமைப்புடன் கூடிய டிஜிட்டல் ரேடியோகிராபி, 70 லட்சம் மதிப்பில், மருத்துவப் பணிகள் துறை உதவியுடன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தருவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி 'டீன்' மனோன்மணி கூறுகையில், ''ப்ளூரோஸ்கோபி கருவி உடலின் உள் உறுப்புகளின் இயக்கத்தை நேரடியாகக் காட்டும் நவீன எக்ஸ்ரே கருவியாகும்.
நோயறிதல் மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கு விரிவான பயன்தரும். மாவட்டத்துக்கு ஒரு கருவி மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இக்கருவி செரிமானம், சிறுநீர் பாதை மற்றும் இடைமுக சிகிச்சை பரிசோதனைகளில் முக்கிய பங்காற்றுகிறது. வழக்கமான எக்ஸ்ரே வை விட துல்லியமாக முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
நம் மருத்துவ கல்லுாரியின் கதிரியக்கவியல் சேவைகளுக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாக ப்ளூரோஸ்கோபி கருவி அமைந்துள்ளது,'' என்றார்.

