/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாறு தடுப்பணையில் தண்ணீர் கசிகிறது
/
நல்லாறு தடுப்பணையில் தண்ணீர் கசிகிறது
ADDED : நவ 11, 2025 12:44 AM

அவிநாசி: கோவை மாவட்டம், அன்னுாரில் துவங்கி கருவலுார், அவிநாசி, பூண்டி வழியாக, திருப்பூர் நொய்யல் ஆற்றில் கலக்கும் நல்லாற்றின் பல இடங்கள் புதர்மண்டிக் கிடக்கிறது.
'நல்லாற்றை மீட்டெடுக்க வேண்டும்' என அப்பகுதி சார்ந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில், கருவலுார் அருகே சுப்பராங்கொரை என்ற இடத்தில், நல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டு, நீர் கசிந்து கொண்டிருக்கிறது.
மேலும், கருவலுார் அருகே ராமநாதபுரத்தில் நல்லாறு ஏரிக்கரையை உடைத்து, சிலர் குழாய் பொருத்தி வைத்துள்ளதாகவும், அதில் இருந்து நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது எனவும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, கசிவை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

