/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதிலமடைந்த பாளையக்காரர்கள் சிலை ஆவணப்படுத்தி பாதுகாக்க வலியுறுத்தல்
/
சிதிலமடைந்த பாளையக்காரர்கள் சிலை ஆவணப்படுத்தி பாதுகாக்க வலியுறுத்தல்
சிதிலமடைந்த பாளையக்காரர்கள் சிலை ஆவணப்படுத்தி பாதுகாக்க வலியுறுத்தல்
சிதிலமடைந்த பாளையக்காரர்கள் சிலை ஆவணப்படுத்தி பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : நவ 09, 2025 01:21 AM

உடுமலை: உடுமலை அருகே, சிதிலமடைந்து காணப்படும் பாளையக்காரர்கள் சிலையை பாதுகாத்து, தொல்லியல் துறை ஆவணப்படுத்த வேண்டும், என, வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில், நாயக்கர் கால ஆட்சிக்குப்பின், நிலப்பகுதிகள் பாளையங்களாக பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வை செய்ய பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். கி.பி., 18ம் நூற்றாண்டு வரை பாளையக்காரர்களின் ஆட்சி, இந்த மண்ணில் இருந்துள்ளது. அதன்பின், பாளையக்காரர்கள் ஜமீன்தார்களாகவும், நிலக்கிழார்களாகவும் மாறிவிட்டனர்.
உடுமலையை சுற்றியுள்ள பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட பாளையங்கள் நிர்வாகத்தில் இருந்தன. இதில், பள்ளபாளையம் கிராமத்திற்கு தென் பகுதியில், சிவன் கோயில் உள்ளது. கோயிலுக்கு வெளியே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் கற்சிலையில் கைகூப்பி நின்ற நிலையில் உள்ள தம்பதியினர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
அவர்களது ஆடை அணிகலன் மற்றும் சிகை அலங்காரத்தை வைத்து பார்க்கும் போது, பாளையத்தை ஆட்சி செய்தவர்களாகத் தோன்றுகிறது. இச்சிலை இருக்கும் ஊரின் பெயரே பள்ளபாளையம் என்பதோடு, அருகில் தளி பாளையம் இருந்துள்ளது.
இச்சிலை பள்ளபாளையத்தைச்சேர்ந்த பாளையக்காரர்களோ, அல்லது தளி எத்தலப்ப மன்னரின் பாளையத்தை சார்ந்தவர்களாகவோ இருக்க வாய்ப்புள்ளது.
சிற்ப அமைப்பை பார்க்கும் போது, குறைந்தபட்சம், 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. இது போன்று, சிதிலமடைந்த தனிச்சிற்பங்களை பாதுகாத்து, தமிழக தொல்லியல் துறை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த, அருட்செல்வன், சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

