/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வெற்றி நிச்சயம்' செயலி எளிமைப்படுத்த யோசனை
/
'வெற்றி நிச்சயம்' செயலி எளிமைப்படுத்த யோசனை
ADDED : நவ 09, 2025 01:08 AM

திருப்பூர்: இளைஞர்கள் மத்தியில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும், புதிதாக தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு சார்பில் 'வெற்றி நிச்சயம்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விவசாயம், உற்பத்தி உள்ளிட்ட அனைத்து தொழில் சார்ந்த அரசுத் துறைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, ஒவ்வொரு துறை சார்ந்தும், இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி, அத்துறையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது, சுய தொழில் ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறைகள் சார்பில் வழங்கப்படும் நீண்ட கால பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இப்பயிற்களில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், இச்செயலி வாயிலாகவே, தாங்கள் விரும்பிய துறை, விரும்பும் பயிற்சியில் இணைந்து பயன் பெறலாம்; செயலி வாயிலாகவே தங்கள் விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம் அந்தந்த துறையினர், விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து, பயிற்சி வழங்குவர்.
இருப்பினும், 'இச்செயலி குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை' என, அரசு துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகள் சார்பில் வழங்கப்படும் பயிற்சியில், பங்கேற்போரின் எண்ணிக்கையும் எதிர்பார்த்தளவு இருப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.
எனவே, இச்செயலி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதுடன், செயலியில் உள்ள தகவல்களை அறிந்துகொள்வது என செயலியை கையாள்வதில் எளிமைத்தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

