/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சலுானுக்கு தொழில் உரிமம் ரத்து செய்ய வலியுறுத்தல்
/
சலுானுக்கு தொழில் உரிமம் ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : நவ 28, 2024 06:26 AM

திருப்பூர்; சலுான்களுக்கு தொழில் உரிமம் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், அதன் நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 1000க்கும் மேற்பட்ட சலுான்கள் உள்ளன. இதனை எங்கள் குலத் தொழிலாக நடத்தி வருகிறோம். தற்போது சலுான்களுக்கு தொழில் உரிமம், தொழில் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் உரிய வருமானமின்றி சவரத் தொழிலாளர் குடும்பங்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளன. குடும்பம் நடத்துவதே சிரமமாக உள்ளது. இந்நிலையில் தொழில் உரிமம், தொழில்வரி என எங்கள் மீது மேலும் சுமையைத் திணிக்கும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.