/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜனநாயக மாதர் சங்க மாநாடு தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
ஜனநாயக மாதர் சங்க மாநாடு தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜூலை 07, 2025 10:54 PM
உடுமலை; உடுமலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நகர மாநாடு நடந்தது. நகர தலைவர் சத்தியபாமா தலைமை வகித்தார். செயலாளர் சித்ரா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
மாநாட்டில், உடுமலை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.
கடன் பெற்ற பெண்களை மிரட்டும் நிதி நிறுவனத்தின் மீது போலீசில் புகார் கொடுத்தால் உடனடியாக புகாரை ஏற்று விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைவராக சத்திய பாமா, செயலாளராக சித்ரா, பொருளாளராக துரையம்மாள் உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை, மாவட்ட செயலாளர் பானுமதி அறிமுகம் செய்து வைத்து பேசினார்.