/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
வக்கீல் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2024 11:28 PM

திருப்பூர்; தமிழகத்தில் தொடர்ந்து வக்கீல்கள் கொலை செய்யப்படுவது, தாக்குதலுக்கு உள்ளாவது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இவற்றைக் கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து, நேற்று மற்றும் இன்றும் இரு நாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, வழக்கு விசாரணைகள் வேறு தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. இருப்பினும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.