ADDED : டிச 31, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் அ.தி.மு.க.,வினர் மேற் கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு எம்.எல்.ஏ., ஆனந்தன் தலைமை வகித்தார். கழக அமைப்புச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், சித்துராஜ் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், இது விஷயத்தில், தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.