ADDED : ஜூன் 25, 2026 03:16 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: ஆதி தமிழர் பேரவை சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் சோழன் தலைமை வகித்தார். துாய்மை தொழிலாளர் பேரவை மாநில தலைவர் பாண்டியன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சியில், துாய்மை பணியாளரை, கையால் மனித கழிவை அள்ளும் பணியில் ஈடுபடுத்தியவர்கள் மற்றும் கண்காணிக்க தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
