ADDED : ஜூலை 18, 2026 09:19 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை ரத்து செய்யக்கோரி, திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் முன் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0, கடந்த 2025ம் ஆண்டு இறுதியில், அவசரமாக கொண்டு வரப்பட்டது. வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் ஆகிய மூன்று துறை வேளாண் பொறியியல் துறை ஆகிய நான்கு துறை பணிகளை, ஒரு களப்பணியாளர் மேற்கொள்ளவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டம், தோட்டக்கலை விவசாயிகளின் வளர்ச்சியையும், வருவாயையும் பாதிக்கச் செய்யும். வல்லுனர் குழு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்,' என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
