/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் வேகமெடுக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கை
/
மாவட்டத்தில் வேகமெடுக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கை
மாவட்டத்தில் வேகமெடுக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கை
மாவட்டத்தில் வேகமெடுக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கை
ADDED : அக் 30, 2025 12:40 AM
திருப்பூர்: வடகிழக்கு பருவமழை தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை வேகப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் மூலம் தொடர் பொது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, காங்கயம் தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கென டாக்டர், செவிலியர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர், இணை நோய் உள்ளவர்கள் உள்ளிட்டோரை உடனடியாக மீட்க, அரசு மருத்துவக் கல்லுாரியில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:
பருவமழை காலத்தையொட்டி முழு நேரமும், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலத்துக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன. மாவட்டம் முழுதும் முன் மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
டெங்கு கொசு தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் அதிகம் உற்பத்தியாகும். வீட்டின் சுற்றுப்புறப்பகுதியில் மழைநீர் தேங்காமல் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இணை நோய் உள்ளவர் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு தொடர்ந்தால் , உடனடியாக டாக்டரை சந்தித்து மருத்துவ சிகிச்சை துவங்க வேண்டும்.

