/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குன்னத்துார் குளம் நிரம்பியது; தண்ணீரால் சாலை மூழ்கியது
/
குன்னத்துார் குளம் நிரம்பியது; தண்ணீரால் சாலை மூழ்கியது
குன்னத்துார் குளம் நிரம்பியது; தண்ணீரால் சாலை மூழ்கியது
குன்னத்துார் குளம் நிரம்பியது; தண்ணீரால் சாலை மூழ்கியது
ADDED : அக் 30, 2025 12:40 AM

திருப்பூர்: குன்னத்துார் குளம் அருகே, பாலம் கட்டவேண்டும் மா.கம்யூ., சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட தண்ணீரால், குன்னத்துார் குளம் ஏற்கனவே நிரம்பியிருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக, குறிச்சி குளம் நிரம்பி, குன்னத்துார் குளத்துக்கு தண்ணீர் வந்தது.
தற்போது, குன்னத்துார் குளம் நிரம்பி, தண்ணீர் வெளியேறிவருகிறது. இதில், தரைப்பாலம் மூழ்கி, செங்காளிபாளையம் செல்லும் தார் ரோட்டில், தண்ணீர் நிரம்பியுள்ளது.
குன்னத்துார் - கோபி ரோடு, பெரியபாலம் சந்தைப்பாளையம் வரை, ரோட்டில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதையடுத்து மா.கம்யூ., குன்னத்துார் நகர செயலாளர் சின்னச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், தாலுகா செயலாளர் சரஸ்வதி, தமிழக விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கொளந்த சாமி உள்ளிட்டோர், குன்னத்துார் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் நேற்று அளித்த மனு:
குன்னத்துார் குளம் நிரம்பியதால், செங்காளிபாளையம் ஊருக்கு செல்லும் தார் ரோடு முழுவதும் மூழ்கிவிட்டது. இதனால், போக்குவரத்து முடங்குகிறது. மாற்று ஏற்பாடாக, அப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும். பொன்காளியம்மன் நகருக்கு, ஆற்று குடிநீர் குழாய் விரைவாக பதிக்கவேண்டும்.

