/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டெங்கு தடுப்பு பணிகள் கிராமசபாவில் விவாதம்
/
டெங்கு தடுப்பு பணிகள் கிராமசபாவில் விவாதம்
ADDED : ஜன 24, 2025 06:40 AM
திருப்பூர்; 'டெங்கு தடுப்பு பணி குறித்து வரும், 26 ம் நடக்கவுள்ள கிராமசபை கூட்டத்தில் விவாதித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, 12,526 ஊராட்சிகளிலும் வரும், 26ம் தேதி கிராமசபா கூட்டம் நடக்கிறது. மக்கள் கூடும் இக்கூட்டத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, பொது இடங்களை சுத்தம் செய்து, துாய்மையாக வைத்தல், சுத்தமான குடிநீர் வினியோகம், ஊராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தல், பராமரித்தல், அனைத்து பகுதியிலும் கொசு உற்பத்தியை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும்.
மக்கள் குடிநீரை காய்ச்சி குடிப்பதுடன், ஒரு பகுதியில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை குறித்து அறிந்து கொள்வதுடன், அனைத்து வீடுகளிலும் கழிப்பிடம் கட்டி அதனை பயன்படுத்த வேண்டும்.
திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேங்கும் மழைநீரால் லார்வா உற்பத்தி, கொசு அதிகரிப்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள், சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

