/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் 'டிசைன் ஸ்டுடியோ' ஆடை மாடலிங் ஒளிபரப்பு வசதி
/
திருப்பூரில் 'டிசைன் ஸ்டுடியோ' ஆடை மாடலிங் ஒளிபரப்பு வசதி
திருப்பூரில் 'டிசைன் ஸ்டுடியோ' ஆடை மாடலிங் ஒளிபரப்பு வசதி
திருப்பூரில் 'டிசைன் ஸ்டுடியோ' ஆடை மாடலிங் ஒளிபரப்பு வசதி
ADDED : ஏப் 29, 2025 06:57 AM
திருப்பூர் : பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருப்பூரில் 'டிசைன் ஸ்டுடியோ' அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின், 75 சதவீத பங்களிப்புடன், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'டிசைன் ஸ்டுடியோ' அமைக்கும் பணி, திருப்பூர் நிப்ட்- டீ' கல்லுாரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஆடை அணிவகுப்பு நடத்துவதற்காக, 'ரேம்ப் அண்ட் ரன்வே' அமைக்கும் பணி நடந்து வருகிறது. 'மீடியா லேப்'-ல், ஆடைகளை பல டிசைன்களில் வடிவமைத்து, வெளிநாட்டு வர்த்தகருக்கு, நேரடி ஒளிபரப்பில் காட்சிப்படுத்தும் வசதி செய்யப்படும்.
'டிசைன்' தயாரானதும், ஆடையை வடிவமைத்து, மாடலிங் மூலம் அணிவகுப்பு நடத்தி, வர்த்தகருக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதற்கு பின், தேவையான திருத்தம் செய்து, ஆடை 'டிசைன்' இறுதி செய்யப்படும். ஏற்றுமதியாளர்கள் இணைந்து, 'திருப்பூர் பேஷன் கிளஸ்டர்' என்ற நிறுவனத்தை துவக்கி, அரசு மானியத்துடன், இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக, 'டிசைனிங் லேப்', 'காஸ்ட்யூம் அண்ட் பேஷன் லேப்', தொழில்நுட்ப உபகரணங்கள் நிறுவுதல், திறன் பயிற்சி அளிக்கும் கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.

