/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறிமுதல் செய்யப்பட்ட 196 கிலோ கஞ்சா அழிப்பு
/
பறிமுதல் செய்யப்பட்ட 196 கிலோ கஞ்சா அழிப்பு
ADDED : பிப் 20, 2025 06:13 AM
திருப்பூர்; திருப்பூரில், 66 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 196.5 கிலோ கஞ்சாவை கோவையில் போலீசார் அழித்தனர். திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் கடந்த, 2019ம் ஆண்டு முதல் பதியப்பட்ட, 66 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் பொருட்கள், திருப்பூர் இன்றியமையா பண்டக விதிக்கு உட்பட்ட தனி சிறப்பு கோர்ட் உத்தரவின் படி, திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, 193.5 கிலோ கஞ்சா, 3 கிலோ கஞ்சா சாக்லேட் என, மொத்தம், 196.5 கிலோ போதை வஸ்துகள் கோவை மதுக்கரை செட்டிபாளையத்தில் இயங்கி வரும் கோவை உயிரிக்கழிவு மேலாண்மை நிறுவனத்தில், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

