/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளிமாநில தொழிலாளர் விவரம்; பதிவு செய்ய சிறப்பு முகாம்
/
வெளிமாநில தொழிலாளர் விவரம்; பதிவு செய்ய சிறப்பு முகாம்
வெளிமாநில தொழிலாளர் விவரம்; பதிவு செய்ய சிறப்பு முகாம்
வெளிமாநில தொழிலாளர் விவரம்; பதிவு செய்ய சிறப்பு முகாம்
ADDED : நவ 26, 2024 11:57 PM
திருப்பூர்; வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்ய நடைபெறும் சிறப்பு முகாமில், அனைவரும் பங்கேற்று பதிவு செய்ய வேண்டுமென, தொழிலாளர் உதவி ஆணையர் வலியுறுத்தி உள்ளார்.
திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கோழிப்பண்ணை, செங்கல் சூளை, கட்டுமான ஒப்பந்த தொழிலாளர், புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர் தொடர்பான விவரங்களை, https://labour.tn.gov.in/ என்கிற தளத்தில் பதிவு செய்யவேண்டும்.
தொழிலாளர் பதிவுக்கான சிறப்பு முகாம், தாராபுரத்தில் வரும் 29ம் தேதி, பல்லடத்தில், 30ம் தேதி, அவிநாசி மற்றும் பூண்டியில் டிச., 6ம் தேதி, பெருமாநல்லுார் மற்றும் கணக்கம்பாளையத்தில், 7ம் தேதி, வீரபாண்டியில், 14ம் தேதி, 21ம் தேதி அந்தந்த பகுதி தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஒத்துழைப்புடன் நடைபெறும். தொழில் நிறுவனத்தினர், தங்களிடம் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை தவறாமல் பதிவு செய்யவேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.