
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி ; அவிநாசி தாலுகா, பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட தேவம்பாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. பொங்கல் விழா கடந்த 3ம் தேதி பூச்சாட்டுதல், கிராம சாந்தியுடன் தொடங்கியது. நேற்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல்,அலங்கார பூஜை, கம்பம் கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீர் விழாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
கோவில் விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.