/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் தேவனுார்புதுார் மக்கள் அவதி
/
பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் தேவனுார்புதுார் மக்கள் அவதி
பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் தேவனுார்புதுார் மக்கள் அவதி
பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் தேவனுார்புதுார் மக்கள் அவதி
ADDED : செப் 02, 2025 08:14 PM
உடுமலை ; உடுமலை அருகே தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் தேவனுார்புதுார் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த கிராமம் உடுமலை மற்றும் பொள்ளாச்சி தாலுகாவின் எல்லையில் உள்ளது.
இந்த ஊருக்கு, பொள்ளாச்சியிலிருந்தும், உடுமலையிலிருந்தும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல்வேறு கிராமங்களிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இங்கு பஸ் நிறுத்தம் மட்டும் உள்ளது. இதனால், அங்கு வரும் பஸ்கள் நிறுத்த இடமில்லாமல் ரோட்டில் நிறுத்தப்படுகிறது. மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர். ஆனால், அமைக்கப்படாததால், கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகமும், உடுமலை ஒன்றிய நிர்வாகமும் தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். இதன் வாயிலாக, மக்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.