/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சி அடைந்த பாரதம்; விழிப்புணர்வு வாகனம் கிராமங்களில் பயணம்
/
வளர்ச்சி அடைந்த பாரதம்; விழிப்புணர்வு வாகனம் கிராமங்களில் பயணம்
வளர்ச்சி அடைந்த பாரதம்; விழிப்புணர்வு வாகனம் கிராமங்களில் பயணம்
வளர்ச்சி அடைந்த பாரதம்; விழிப்புணர்வு வாகனம் கிராமங்களில் பயணம்
ADDED : ஜன 21, 2024 11:50 PM
உடுமலை;'வளர்ச்சி அடைந்த பாரதம்' விழிப்புணர்வு வாகனம், திருப்பூர் மாவட்ட கிராமங்களில் பயணத்தை துவக்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏராளமான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து, மக்கள் அனைவரும் அறிந்து, பயன்பெறும் வகையில், 'வளர்ச்சி அடைந்த பாரதம்' விழிப்புணர்வு வாகனம், நாடு முழுவதும் பயணித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்துக்கு நான்கு வாகனங்கள் வந்து சேர்ந்துள்ளன. அதன்படி, கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டுச்சென்ற வாகனங்கள், மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு பயணித்து, மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள, மெகா திரையில் மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்து, விரிவாக விளக்கும் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.
'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்கிற 114 பக்க கையடக்க புத்தகமும், மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல், பழங்குடியினரின் வளர்ச்சியை உறுதிப்படுத்துதல், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன், பயிர் காப்பீடு திட்டம் மின்னணு தேசிய வேளாண் சந்தை, வேளாண் கடன் அட்டை, உஜ்வாலா, தேசிய கல்விக்கொள்கை, பிரதமரின் வீட்டு வசதி திட்டம், துாய்மை இந்தியா இயக்கம்,
அம்ருத் ஆயுஷ்மான் பாரத், மக்கள் மருந்தக திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, முத்ரா திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடு, வந்தேபாரத் ரயில், டிஜிட்டல் இந்தியா, மகளிர் முன்னேற்றம் என மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஏராளமான திட்டங்கள் குறித்த விளக்கங்கள், 'வளர்ச்சி அடைந்த பாரதம்' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும், உஜ்வாலா திட்டத்தில், 31.54 கோடி வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் 10 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில், 2.5 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை எண்ணிக்கை, 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜம்மு -காஷ்மீரில் கடந்த, 2018ல், 143 தீவிரவாத ஊடுருவல் நிகழ்ந்த நிலையில், 2022ல், 14 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய அரசு திட்ட பயன்கள் குறித்த புள்ளி விபரங்களும், புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த வாகனத்தை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.