/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனை மேம்பாடு: மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
/
அரசு மருத்துவமனை மேம்பாடு: மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
அரசு மருத்துவமனை மேம்பாடு: மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
அரசு மருத்துவமனை மேம்பாடு: மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
ADDED : அக் 01, 2024 12:13 AM

அவிநாசி: திருமுருகன்பூண்டியில் உள்ள வேலன் ஹாலில், மா.கம்யூ., கட்சியின் அவிநாசி ஒன்றிய, 12 வது மாநாடு நடைபெற்றது.
இதில், மாநில குழு உறுப்பினர் காமராஜ் மாவட்ட செயலாளர் முத்து கண்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய செயலாளராக ஈஸ்வரமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, 24 மணி நேர, தீவிர அவசர சிகிச்சை பிரிவு மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய சவக்கிடங்கு அமைக்க வேண்டும். அவிநாசி பேரூராட்சி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.
அரசு கலைக் கல்லுாரியில் பாடப்பிரிவுகளை கூடுதலாக சேர்க்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள வஞ்சிபாளையம், கருக்கங்காட்டுபுதுார் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தரவேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சேவூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
ஏ.கே.வி.என்., மருத்துவமனை செல்லும் வழியில் பைபாஸ் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரை நிரந்தரமாக வெளியேற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.