ADDED : ஜன 02, 2025 11:15 PM
திருப்பூர்: வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், முடிவடைந்த பணிகள் திறப்பு விழா மற்றும்; புதிய பணிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த திட்ட பணிகளை திறந்து வைத்து, 59.58 லட்சம் ரூபய் மதிப்பீட்டிலான புதிய பணிகளை துவக்கி வைத்தார். வள்ளியரச்சல் ஊராட்சி புளியங்காட்டுபுதுாரில், 15 லட்சம் ரூபாயில், கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கணபதிபாளையத்தில், 33 லட்சத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம், வீரசோழபுரத்தில், 33 லட்சம் ரூபாயில், ஊராட்சி அலுவலக கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் திறந்துவைத்தார்.
லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில், கம்பளியம்பட்டி ஆதிதிராவிடர் கிழக்கு குடியிருப்பு மூன்றாவது வீதியில், 7.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி, சேர்வகாரன்பாளையம், காந்தி நகரில், 10.33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலையை பலப்படுத்தும் பணி உள்பட மொத்தம், 59.58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகளை துவக்கி வைத்தார். தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ்ராஜா, திருப்பூர் மாநகராட்சி, 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், காங்கயம் தாசில்தார் மோகனன் பங்கேற்றனர்.