/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னாறு ரோட்டில் மேம்பாட்டு பணி
/
சின்னாறு ரோட்டில் மேம்பாட்டு பணி
ADDED : நவ 14, 2024 04:13 AM

உடுமலை: சின்னாறு ரோட்டில், பள்ளபாளையம் சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள் நடக்கிறது.
உடுமலையில் இருந்து சின்னாறு செல்லும் ரோடு, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரோடாக உள்ளது. இந்த ரோட்டில், பள்ளபாளையம் சந்திப்பில் திருமூர்த்திமலை ரோடு பிரிகிறது; சின்னாறு ரோட்டில், அமராவதி அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்கின்றன.
பள்ளபாளையம் சந்திப்பில், சில ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது.
தற்போது, 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சந்திப்பு மேம்பாட்டு பணி நடக்கிறது. சேதமடைந்த ரோடு முழுமையாக புதுப்பிக்கும் பணி, உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், தீவிரமடைந்துள்ளது.

