/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குண்டம் மாற்றியமைக்க பக்தர்கள் வேண்டுகோள்
/
குண்டம் மாற்றியமைக்க பக்தர்கள் வேண்டுகோள்
ADDED : மார் 19, 2024 12:12 AM
திருப்பூர்;''கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டத்தை, பழைய முறையில் மாற்றியமைக்க வேண்டும்'' என, பெருமாநல்லுார் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெருமாநல்லுார் ஊர் பக்தர்கள், பொதுமக்கள் சார்பில், கொண்டத்துக்காளியம்மன் கோவில் செயல் அலுவலரிடம் நேற்று அளிக்கப்பட்ட மனு:
பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் அமைக்கப்பட்டதில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் கடந்த ஆண்டு குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. பக்தர்களின் அச்சத்தை போக்க, செங்கல்களை அகற்றி மீண்டும் பழைய முறையில் மாற்றியமைக்க மக்களை அழைத்து ஆலோசனை செய்ய வேண்டும்.
அரசு டாக்டர்கள் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோவில் வளாகத்துக்கு வெளியே முதலுதவி செய்ய வேண்டும். நெகிழி பைகளை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை விதிக்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். தற்காலிக கழிப்பறை போதிய அளவில் ஏற்பாடு செய்ய வேண்டும். படைக்களக்காரர்களுக்கு படைக்களம் எடுத்து வரும் போது, போலீசாரால் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

