தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவில்கள் குறித்து புகார்களை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்! பக்தர்களுக்கு அழைப்பு

 கோவில்கள் குறித்து புகார்களை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்! பக்தர்களுக்கு அழைப்பு

 கோவில்கள் குறித்து புகார்களை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்! பக்தர்களுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 14, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: 'கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து இணையதளம், இலவச தொலைபேசி எண் வாயிலாக பொதுமக்கள், பக்தர்கள் புகார் தெரிவிக்கலாம்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஏதேனும் முறைகேடுகள், சட்ட விரோதமாக பணம் பெறுதல், கோவில் திருப்பணிகள் மற்றும் கோவில் தொடர்பான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்கள் நடைபெறுவதாக அறிந்தால், ministe-r-_hrce@gov.in என்ற இ-மெயில் முகவரியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தகுந்த ஆதாரத்துடன் புகார்கள் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், அறநிலையத்துறை பொதுமக்கள் குறை தீர்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 1757. இணையதள முகவரி https://hrce.tn.gov.in. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது புகார்களை க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து துறையின் இணையதளத்தில் தெரிவிக்கலாம், என, அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us