தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு


ADDED : ஜூலை 14, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: 'பள்ளிகளில் நாளை (15ம் தேதி) கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும்,' என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்தநாள், ஜூலை 15ல் கொண்டாடப்படுகிறது. இந்நாளை, பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும். பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகளை நடத்த வேண்டும். திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து கூறுகையில், 'அனைத்து துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இணை இயக்குனரின் அறிவிப்பு கொடுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தனி பிரிவுகளில் நடத்தப்படும் போட்டி, பரிசுகள் குறித்து ஆவணம் தயாரிக்க வேண்டும்; அவை ஆய்வு செய்யப்படும். எனவே, அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us