/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் ரோட்டில் கழிவு நீர் பக்தர்கள் - போலீசார் சிரமம்
/
கோவில் ரோட்டில் கழிவு நீர் பக்தர்கள் - போலீசார் சிரமம்
கோவில் ரோட்டில் கழிவு நீர் பக்தர்கள் - போலீசார் சிரமம்
கோவில் ரோட்டில் கழிவு நீர் பக்தர்கள் - போலீசார் சிரமம்
ADDED : டிச 06, 2024 05:19 AM

திருப்பூர் : பெருமாநல்லுாரில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஈஸ்வரன் கோவில் செல்லும் பிரதான ரோட்டில் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள், போலீசார் சிரமப்பட்டு வருகின்றனர்.
பெருமாநல்லுாரில் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்லும் பிரதான ரோட்டில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி மந்த கதியில் நடந்து வருவதால், கழிவு நீர் செல்ல வழியில்லாமல், பிரதான ரோட்டில் கடும் துர்நாற்றத்துடன் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரோடு முழுவதும் பரவி, தேர் நிலை கொண்டிருக்கும் இடத்திலும், கோவில் வளாகம் செல்லும் பாதையில் கழிவு நீர் செல்கிறது. இதன் காரணமாக ரோட்டை பயன் படுத்தும் பக்தர்கள், போலீசார் சிரமப்பட்டு வருகின்றனர். பெருமாநல்லுார் ஊராட்சி நிர்வாகம் பணியை துரிதப்படுத்தி, உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.